குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி:
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்தில் காணப்படுகின்ற ஒடுக்குப் பாலம் 85 மில்லியன் ரூபா செலவில் அமைக்கும் பணிகள,; சில நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
ஊற்றுப்புலம் கிராமத்தின் பழைய குடியிருப்பு மக்கள் கிளிநொச்சி நகரத்துடனான தொடர்புக்கு இருக்கின்ற ஒரேயொரு பாதையில் ஆபத்தான நிலையில் மிகவும் ஒடுங்கிய தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் இருந்து வந்துள்ளது. இந்தப் பாலத்தின் ஊடாக ஈருளி, உந்துருளிகள் மாத்திரமே பயணம் செய்ய முடியும் இதனால் மக்கள் மிகவும் துன்பங்களை சந்தித்து போக்குவரத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
எனவே இது தொடர்பாக அந்த மக்கள் கடந்த காலத்தில் அரசியல் தரப்புகள் மற்றும் ஊடகங்கள் ஊடாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் முன்னைய அரசாங்கத்திலும்,த தற்போதைய அரசாங்கத்திலும் குறித்த பாலம் தொடர்பில் பெருந்ததெருக்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு அமைவாக அவர்களால் நிரந்தர பாலம் அமைப்பதற்கான பணிப்புரைகள் வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து பரந்தன் முல்லைத்தீவு வீதியில் நெத்தலியாற்றில் நிரந்தர பாலம் அமைக்கும் வரைக்கும் அமைக்கப்பட்டிருந்த 50 மில்லியன் பெறுமதியான இரும்பு பாலம் ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அத்தோடு அதற்கான கட்டுமானப் பணிகளுக்கு 35 மில்லியன் ரூபாவும் ஒதுக்ககப்பட்டு பணிகள் ஆரம்பிக்கபடவுள்ளது. இதன் மூலம் அந்த மக்கள் மிக நீண்ட காலமாக முகம் கொடுத்து வந்து மிகப்பெரும் நெருக்கடி தீர்வுக்கு வரவுள்ளது.
இது தொடர்பில் இன்று 10-08-2016 ஊற்றுப்புலம் கிராமத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் பொறியியலளர், ஆகியோர் ஒப்பந்தகாரர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டள்ளனர்
இதன் போது கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் சி.முகுந்தன் மற்றும் கமக்கார அமைப்பு, மூத்த பிரஜைகள் சங்க தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.