குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-
நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் குற்ற செயலில் ஈடுபடுபவதற்கு என வெளி மாவட்டங்களில் இருந்து குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் வந்துள்ளதாக, அறிந்துள்ளேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்து உள்ளார்.
யாழ்.மேல் நீதிமன்றில், 141 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளை தன் வசம் வைத்திருந்தார் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் தற்போது அமைதியாக உள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற நீதவான்கள் இறுக்கமான கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னேடுபதனால் போதை வஸ்து, குழு மோதல், வாள் வெட்டு, களவு, கொள்ளை ஆகியன கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
இந்த நிலையில் இவ்வாறன பெரும் குற்றம் புரிந்தவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்க முடியாது. என தெரிவித்தார்.
மேலும் 141 கிலோ கஞ்சாவின் பெறுமதி சுமார் 80 லட்சங்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர் கைது செய்யபடாது விட்டால், இவர் இன்று லட்சாதிபதியாக இருப்பார். என தெரிவித்தார்.