ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இராணுவ புலனாய்வுப் பிரிவின் சாஜன்ட் மேஜர் உள்ளிட்ட 63 புலனாய்வு அதிகாரிகளின் கணக்குகளை பரிசோதனை செய்ய பொலிஸாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த வழக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்தக் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இரகசியப் பொலிஸார் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்ட, கல்கிசை மேலதிக நீதவான் சுலோசனா வீரசிங்க, 32 நிறுவனங்களிலுள்ள 63 பேரினதும் கணக்குகளை பரிசோதிக்க, அனுமதி வழங்கியுள்ளதாக எமது தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், லசந்த கொலை செய்யப்பட்ட போது, கண்ணால் கண்ட சாட்சி எனக் கூறப்படும் நபர், இன்னும் சுகயீனமான நிலையிலேயே உள்ளதால் இந்த வழக்கு எதிர்வரும் 25ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று அடையாள அணிவகுப்பு நடைபெறவில்லை என்பதோடு, சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில். வைக்கப்பட்டுள்ளார்.