குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் இன்றைய தினம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சில திருத்தங்களுடன் இந்த சட்டம் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமானது இராணுவத்திற்கு துரோகம் இழைக்கும் வகையில் அமைந்து விடும் என கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு காணாமல் போனவர்கள் பற்றிய உண்மையான விபரங்களை அளிக்க வேண்டியது அவசியமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்கும் அவர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டுவதற்கும் இந்த காணாமல் போனோர் குறித்த அலுவலகம் ஓர் பொறிமுறைமையை உருவாக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.