குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
பொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த அமைப்பு சிறுபான்மை மதங்கள் மற்றும் இனசமூகங்களுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுபான்மை இன மற்றும் மத சமூகங்களை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையில் சிங்கள பௌத்த கொள்கைகள் கோட்பாடுகள் பிரச்சாரம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.