177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இரத்தினபுரியில் இன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையாற்ற உள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இன்றைய தினம் பிற்பகல் 3.00 மணியளவில் ‘போராட்டத்திற்கு உயிர்ப்பூட்டும் புதிய சக்தி’ என்ற தொனிப் பொருளில் இரத்தினபுரியில் கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்துள்ள கூட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய கூட்டத்தில் புதிய கட்சி அல்லது புதிய அமைப்பு ஒன்று பற்றி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love