குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சார்க் மாநாட்டை இலங்கை புறக்கணிக்கவில்லை என என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சார்க் மாநாட்டை புறக்கணிக்கவோ அல்லது புறக்கணிக்கும் நோக்கமோ கிடையாது என தெரிவித்துள்ள அவர் தற்போதைய சூழ்நிலையில் சார்க் மாநாட்டை பாகிஸ்தானில் நடத்துவது உசிதமானதாக இருக்காது என்ற இலங்கையின் நிலைப்பாடு மிகவும் சரியான முறையில் அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உறுப்பு நாடுகள் பங்கேற்காது சார்க் மாநாட்டை நடத்துவது சாத்தியமில்லை என அறிவிக்கப்பட்டதாகவும் பிராந்திய வலயங்களுக்கு இடையிலான கூட்டுறவு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.