133
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட உள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஆணையாளர் பிலிப்போ க்ரான்டி இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்கள் உதவுதல் மற்றும் இடம்பெயர் மக்களுக்கு நலன்களை வழங்குதல் போன்ற பணிகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடற்றதன்மையை இல்லதொழிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love