134
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.மலையாக தோட்ட தொழிலாளிகள் ஒரு நாள் சம்பளம் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமுகமாக ,யாழில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் , யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது தற்போது இணக்கத்திற்கு வந்துள்ள 805 ரூபாய் சம்பளம் என்பதனை தாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் , நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Spread the love