136
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான ஓர் ஊழல் மோசடி தொடர்பில் வாக்கு மூலமொன்றை அளிக்க முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க , ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். தபால்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தபால் திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
Spread the love