121
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சிரியாவின் அலப்போ நகர் மீது மேற்கொண்டு வரும் தாக்குதலிற்காக ரஸ்யாவிற்கு எதிராக யுத்தகுற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரிட்டனின் நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.மேலும் அவர் லண்டனிலுள்ள ரஸ்ய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ரஸ்யா தற்போதைய தனது நடவடிக்கைகளை தொடர்ந்தால் அது சர்வதேசசமூகத்தால் ஓதுக்கப்படும் நிலை உருவாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Spread the love