குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கியின் தகவல்கள் கசிந்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோரியுள்ளார்.
மத்திய வங்கியின் முக்கியமான தகவல்கள் எவ்வாறு கசிந்தது யார் இவ்வாறு கசியவிட்டது என்பது குறித்து விரிவான அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. வங்கியின் தகவல்களை பாதுகாத்துக் கொள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுனர் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
தகவல்கள் கசிந்த விவகாரம் வங்கிக்கு உள் இடம்பெற்ற ஒன்று எனவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனவும் பிரதமர் பிரசல்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதன் பின்னர் இது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.