குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சிரியாவின் அலப்போ நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் குண்டுத் தாக்குதல்கள் யுத்தக் குற்றச் செயலாகாது எனவும் சிரியாவின் யதார்த்த நிலைமைகளை கருத்திற் கொள்ளாது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
சிவிலியன்களுக்கு மத்தியில் தீவிரவாதிகள் மறைந்திருந்தாலும் ரஸ்யா அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் என தெரிவித்துள்ள புட்டின் மக்களை மனித கேடயங்களைப் பயன்படுத்தி முழு உலகிற்கும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுப்பதனை அனுமதிக்க முடியாது எனவும் தற்போதைய சூழ்நிலைக்கு அமெரிக்காவே பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ரஸ்யா நடத்தி வரும் குண்டுத் தாக்குதல்கள் யுத்தக் குற்றச் செயலாகவே கருதப்பட வேண்டுமென பிரான்ஸ் அதிபர் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.