Home இலங்கை அமைச்சு விவகாரங்களில் தலையீடு செய்யப்படாது என மனோவிற்கு அரசாங்கம் உறுதி

அமைச்சு விவகாரங்களில் தலையீடு செய்யப்படாது என மனோவிற்கு அரசாங்கம் உறுதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமைச்சு விவகாரங்களில் தலையீடு செய்யப்படாது என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனுக்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏனைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் தலையீடு இன்றி செயற்படுவதற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என பிரதமர் ரணில்விக்ரமசிங்க, மனே கணேசனுக்கு உறுதியளித்துள்ளார் எனவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அமைச்சு விவகாரங்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலையீடு செய்வதாகவும் இதனால் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யவும் தயங்கப் போவதில்லை எனவும் அண்மையில் மனோ கணேசன் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அதிருப்தி அடைய வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமக்கு கூறியதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More