குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி லக்ஸான் டயஸ் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு அணைக்குழு உள்ளிட்ட தரப்புக்கள் மீது கடுமையான தொனியில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். சுயாதீன நிறுவனங்களின் செயற்பாடுகளில் ஜனாதிபதி தலையீடு செய்ய முடியாது என லக்ஸான் டயஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற ரீதியில் ஜனாதிபதி இவ்வாறு விமர்சனம் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு எதிரான கருத்துக்களை ஜனாதிபதி வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு ஜனாதிபதி விமர்சனம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.