157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
போலியான அடிப்படையில் தமது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்கு குறித்து முறைப்பாடு செய்ய உள்ளதாகத் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தமது பெயரில் இவ்வாறான ஒர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் குறித்த முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்குகளுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை குழப்பும் வகையில் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love