குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு அவசர விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுயாதீன ஆணைக்குழுக்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஆகியன தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்டிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் பற்றி இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்களை தொடர்பிலும் இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.