குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பளித்து வருகின்றனர் எனவும் இதனையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் செய்திருந்தார் எனவும் சிவில் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன . சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்றைய தினம் மருதானையில் இடம்பெற்ற போது புரவெசி பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி உயங்கொட இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஆட்சியில் சுயாதீன அமைப்புகளில் முழுமையான அரசியல் தலையீட்டை ஏற்படுத்தி நாட்டின் சுயாதீனத்தை முழுமையாக சீரழித்தார் எனவும் ராணுவ அதிகாரிகளை பாதுகாக்கும் செயற்பாடுகளையே அவர் மேற்கொண்டிருந்தார் எனவும் அதே பாணியில் தான் தற்போதைய ஜனாதியும் பயணித்துக் கொண்டிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நல்லாட்சியை ஏற்படுத்துவோம் என்ற அவர்களது வாக்குறுதியை நம்பி வாக்களித்த நாம் ஏமாற்றப்படுவதான உணர்வு தற்போது எழுந்துள்ளது எனவும் காமினி உயங்கொட குறிப்பிட்டுள்ளார்.