குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 65-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற போரில் முஹம்மது நபியின் பேரனான இமாம் ஹசேன் கொல்லப்பட்ட நாளை அனுஸ்டிப்பதற்காக ஷியா பிரிவு மக்கள் கூடாரம் ஒன்றை அமைத்து சடங்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தீவிரவாதி தனது தனது உடலில் கட்டிவைத்திருந்த குண்டை வெடிக்க வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எவரும் உரிமை கோராத நிலையில் ஐஎஸ் அமைப்பினர்தான் மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.