148
பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் நடைபெறும் BRICS – BIMSTEC மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (15) இந்தியா பயணமானார். இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
ஒக்டோபர் மாதம் 15 – 16 திகதிகளில் இம்மாநாடு இந்தியாவின் கோவாவில் நடைபெறுகிறது. BRICS மாநாட்டில் பங்குபற்றும் ஜனாதிபதி மாநாட்டில் பங்குபற்றும் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார். பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் ஜனாதிபதியுடன் இப்பயணத்தில் இணைந்துகொண்டுள்ளார்
Spread the love