குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நேபாள பிரஜைகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நேபாள பிரதமர் புஸ்ப கமால் தஹால் கோரியுள்ளார். இந்தியாவில் மாநாடு ஒன்றிற்காக விஜயம் செய்துள்ள ஜனாதிபதியை, நேபாளப் பிரதம சந்தித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவைளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது.
சார்க் நாடுகளுக்கு இடையில் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள இரண்டு நாடுகளும் முக்கிய பங்களிப்பினை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ள நேபாளப் பிரதமர் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நேபாள பிரஜையின் தண்டனை குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறும் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.