குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க எதற்காக பதவி விலகினார் என்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டுமென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தினால், தில்ருக்ஸி பதவி விலகினார் என கருதப்பட முடியாது என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யார் மீதும் நேரடியாக குற்றம் சுமத்தவில்லை எனவும், எனவே தில்ருக்ஸி ஏன் பதவி விலகினார் என்பது பற்றி அவரிடம்தான் கேட்டறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொப்பி அளவானது என்றால் அதனை போட்டுக் கொள்வதில் தவறில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.