குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நிதி நகர் அபிவிருத்தித் திட்டம் கைவிடப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டத்தினால் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக மதத் தலைவர்களும், பிரதேச மீனவர்களும் நேற்றைய தினம் நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டம் நடத்தியிருந்தனர். போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் அபிவிருத்தித் திட்டத்தை கைவிட முடியாது என பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய சுற்றாடல் பாதிப்பு குறித்து ஆராயப்பட்டு அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடல் வளங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இந்த அபிவிருத்தித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.