157
ஆயிரம் ரூபா சம்பளம், வருடத்தில் 300 நாட்கள் வேலை, நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். 800ற்கும் மேற்பட்ட அக்கரபத்தனை – பெல்மோரல், கிரன்லி, கிலஸ்டல் ஆகிய தோட்ட தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பேரணியாக தொழிற்சாலை வரை சென்ற தொழிலாளர்கள் அங்கு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதுடன் உருவ பொம்மைகளை எரித்தும், டயர்களை எரித்தும்,; தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love