141
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக 730 ரூபாய் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்து தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகிய அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஆயிரம் ரூபா சம்பளம், வருடத்தில் 300 நாட்கள் வேலை, நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு 110 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கவே இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love