271
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான குண்டு துளைக்காத வாகனங்கள் காணப்படுகின்றதா என தேடும் நோக்கில் காவல்துறையினரால் இவ்வாறு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்க வாகனங்கள் சட்டவிரோதமான முறையில் குமார வெல்கமவின் இல்லத்;தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என குற்றம் சுமத்தப்பட்டிருந்த போதும் இந்த தேடுதலின் போது எவ்வித வாகனங்களும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love