குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலரி கிளின்ரனிடம் கோரப்படும் என தமிழ்ஸ் போ கிளின்ரன் என்ற புலம்பெயர் தமிழ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகள் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதனை தெளிவாக காண முடியவில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காடடியுள்ளது.
வடக்கில் தற்போது சுமார் அரை மில்லியன் இடம்பெயர்தமிழர்கள் வாழ்ந்து வருவதாகவும் யுத்தம் காரணமாக தாய் தந்தையரை இழந்த 50,000 சிறுவர் சிறுமியரும், 90,000 கணவரை இழந்த பெண்களும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் கால மாறு நீதிப்பொறிமுறைமை பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனிலும் குறைந்த தீர்வுத் திட்டங்களை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.