குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் வர்த்தக பிரதிநிதிகள் குழுவினருடன் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவே இவ்வாறு வர உள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் சீனா கொண்டுள்ள ஆதிக்கத்திற்கு நிகராக இந்தியாவும் இலங்கையில் காலூன்றிக் கொள்வதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என கொழும்புத்தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அண்மையில் சீனா இலங்கையில் பாரியளவில் முதலீடுகளை செய்ய முன்வந்துள்ள நிலையில் அண்டை நாடான இலங்கையில் இந்தியாவும் முதலீடுகளை செய்து வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு முனைப்பு காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.