குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் நேற்று சந்தித்துக்கொண்ட போது மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தமது அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டு சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 comment
ஏன் மாணவர்கள் கொல்லப்பட்டனர்?
கொலையாளிகளின் பெயர்கள் என்ன?
மாணவர்களை கொல்லத் திட்டம் தீட்டியவர்கள் யார்?
கொலை விசாரணையை நடத்த ஒரு தமிழ்க் குழுவை நியமிக்க முடியுமா?