டெல்லி தேசிய பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து இந்தியா முழுவதும் பறவைக் காய்ச்சல் அபாயம் எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இதேவேளை டெல்லியைப் போலவே மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் உயிரியல் பூங்காவிலும் 10-க்கும் மேற்ப்பட்ட பறவைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் H5N8 என்ற புதிய பறவை காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பறவை காய்ச்சல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்திந்திய மாநில பறவை சரணாலயங்களுக்கும் இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.