தீபாவளி முதல் தொடர்ச்சியாக பண்டிகைகள் வரவுள்ள நிலையில், ஒக்டோபரின் முதல் பத்து நாட்களில் புகையிரத பயணச் சிட்டை விற்பனை கடந்த ஆண்டுகளின் விற்பனையை விட குறைந்துள்ளது. இந்தியப் புகையிரத் துறையால், தினமும் 13,000 புகையிரதங்கள் இயக்கப்படுகின்றன. அதில், ஏறக்குறைய 10 லட்சம் பேர் பயணிப்பார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இம் மாதத்தின் முதல் பத்து நாட்களில் மாத்திரம் 16.5 லட்சம் பேரே பயணம் செய்துள்ளனர்.
இதன் மூலம், புகையிரத பயணச் சிட்டை விற்பனை 7.45 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய ஊடங்கள் கூறுகின்றன.
இந்தியப் புகையிரத் துறை, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிக கட்டணத்துடனான புதிய புகையிரதங்களை அறிமுகம் செய்த நிலையில், பண்டிகை காலத்தின் போது புகையிரத பயணச் சிட்டை விற்பனையில் சரிவு ஏற்படுள்ளமை இங்கே குறிப்படத்தக்கது.