199
யாழப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்ற போது துப்பாக்கி;ச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
Spread the love
1 comment
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம்(கொலை?) குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற ஜனாதிபதி திரு. மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையே விசித்திரமாக உள்ளது? போலீசாரினதும், புலனாய்வுப் பிரிவினரினதும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கே அதிருப்தி/ நம்பிக்கையீனம் இருக்கும்போது, அவற்றை நாம் மட்டும் நம்புவதெப்படி?
யாழ் .பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புப் போன்று தெற்கிலும் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெறுவதாகவும், இது சாதாரணமானதே என்றும் கூறவல்ல ஒரு பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து நீதியை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்? (நன்றி:JVP நியூஸ்,22/10/2016) தெற்கில் கொல்லப்படும் பாதாள உலகக் கோஷ்டிகளுக்கு எதிரான நடவடிக்கையுடன் பல்கலைக்கழக மாணவர்களின் கொலையை ஒப்பிடும் இவருக்கு இப் பதவி பொருத்தமானதுதானா? இது போன்றதொரு சம்பவம் இவரது பிள்ளைக்கு நடந்தால், இதேபோன்றதொரு அறிக்கையை விடுவாரா?
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாதவரை, பாதுகாப்புத் தரப்பினரின், ‘போலியான வாக்குமூலங்கள் மற்றும் சோடித்த அல்லது அழிக்கப்பட்ட ஆதாரங்கள்’, எல்லாம் வலுவுள்ளனவாகவே இருக்கும்! அவற்றை எல்லாம் மீறி இது போன்ற அசாதாரண நிகழ்வுகளுக்கு நீதி கிடைப்பதென்பது, சந்தேகமே!