154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழ்.சுன்னாக பகுதியில் இன்று மதியம் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவொன்று சுன்னாகம் சந்தியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள். வாள்களுடன் புகுந்து அட்காசம் செய்துள்ளனர்.
பின்னர் சிவில் உடையில் நின்ற இரண்டு பொலிஸார் உட்பட மூவரை வாளால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
தற்போது சுன்னாகம் , மருதனார்மடம் பகுதிகளில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை என்பன குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்படுகின்றது
Spread the love
1 comment
நாட்டில் என்ன நடக்கின்றதென்றே அனுமானிக்க முடியவில்லை? குளப்பிட்டிச் சந்திப் பல்கலைக்கழக மாணவர் படுகொலையை நியாயப்படுத்தச் செய்யப்பட்ட, திட்டமிட்டதொரு சதி நாடகமாகவே, சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற பொலிஸாருக்கு எதிரான வாள்வெட்டுச் சம்பத்தவத்தைப் பார்க்க முடிகின்றது! அதை உண்மையாக்குவது போல், பொலிஸாரும் மாணவர்கள் கொலையை, வாள்வெட்டுக் கோஷ்டியுடன் சம்பந்தப்படுத்தி நியாயப்படுத்தி இருக்கின்றார்கள்? அண்மையில் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையை உறுதிப்படுத்துவது போல், தமிழர் தாயக பூமியில் பதற்ற நிலமையைத் தோற்றுவித்து அதைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதையே ஆளும் அரசு விரும்புகின்றது போலும்?
‘குற்றவாளிகள் தப்பினாலும் நிரபராதி ஒருவர் கூடத் தண்டிக்கப்படக் கூடாது’, என்பதே தாரக மந்திரமாகும்! அன்று இருளில் குற்றவாளியை அடையாளம் காண முடியாது போயிருந்தால், அமைச்சர் திரு. மனோ கணேசன் கூறியிருப்பது போல், துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை விடுத்துத் துரத்திப் பிடித்திருக்கலாமே? அது கூட முடியாதவிடத்து, உயிராபத்தைத் தவிர்த்துத் துப்பாக்கிப் பிரயோகத்தை வண்டி மீதோ அன்றி ஓட்டியின் கால்/ கையிலோ செய்திருக்கலாமே? போலீசார்தான் நிறை வெறியில் இருந்ததாக ஏனைய போலீசார் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி
இருக்கின்றார்களே? அவர்கள் குறி பார்த்துச் சுடும் நிலையிலா இருந்தார்கள்?
இன்றைய சம்பவத்தின்போது, வாள்வெட்டுகக் கோஷ்டிகள் கையில் வாள் இருப்பது தெரிந்திருந்தும் அவர்களுக்கு எதிராகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளாதது ஏன்? இந்த விஷமிகளைக் கொல்வது குறித்து யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லையே? அவர்களை வளர்ப்பதும், ஏவி விடுவதும் இவர்களாக இருக்கையில், அவர்களை எப்படிச் சுடுவார்கள்?
‘அன்றைய சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையிலேயே இன்றைய சம்பவம் நடத்தப்பட்டு இருக்கின்றது’, என்பதில் சந்தேகமே இல்லை!