181
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி இன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிய ஏற்கெனவே தற்போதைய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உம்மண் சாண்டி, “முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.
Spread the love