214
குளோபல் தமிழ் செய்தியாளர்
இலங்கையில் அரச பயங்கரவாதம் இன்னமும் உள்ளது என்பதை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் படுகொலை வெளிக்காட்டுவதாக தமிழகத்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்கள் இருவரை இலங்கை காவல்துறை சுட்டுக் கொன்றதற்கு அக் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களும், மாணவர்களும் நடத்திய அறப்போராட்டத்துக்குப் பிறகே துப்பாக்கியால் சுட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையில் தமிழ்ச்சமூகம் இன்றைக்கும் இத்தகைய சூழலில்தான் வசித்து வருகிறத என்பதையே இது வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் இன்னும் நிலவுகிறது என்றும் சிறையில் தமிழர்களை முன்னாள் விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்து மெல்லக்கொல்லும் விஷ ஊசி போடும் இலங்கை அரசு, தற்போது மாணவர்கள் மீதும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக கூறிய அவர் இச்சம்பவத்துக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் கூறியுள்ளார்.
Spread the love