190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் முழு அளவில் விசாரணை நடத்தாது, ஊகங்களை வெளியிடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊகங்களை வெளியிட முடியாது எனவும் தெற்கிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த மரணம் தொடர்பில் தீர்மானங்களை தற்போதைக்கு வெளியிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love