குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கை பௌத்த பிக்குகள் வீசா இன்றி இந்தியாவிற்கு பயணம் செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது. அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தியாவின் மத வழிபாட்டு நிலையங்களில் கடமையாற்றுவதற்காக ஆண்டு தோறும் 55000 பௌத்த பிக்குகள் இந்தியாவிற்கு பயணம் செய்கின்றனர்.
தொழில் வீசா அடிப்படையிலேயே இவர்கள் இந்தியாவிற்கு செல்வதாகவும் இதற்காக 150 டொலர்கள் செலுத்த வேண்டியிருப்பதாகவும் இந்த வீசா நடைமுறையை ரத்து செய்வது குறித்து இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வீசாஇன்றி இலங்கை பௌத்த பிக்குகள் இந்தியாவிற்கு விஜயம் செய்யக்கூடிய சாத்தியங்கள் உருவாகும் என இந்திய அரசாங்க அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.