குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நிறுத்தாமல் செல்லும் வாகனத்தை நிறுத்த குறைந்தபட்ச பலத்தையே காவல்துறையினர் பயன்படுத்த வேண்டுமென காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்திர தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் சமிக்ஞையை கருத்திற்கொள்ளாது செல்லும் வாகனமொன்றை நிறுத்த துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்ச மற்றும் தேவையான பலத்தை எவ்வாறு பாவிப்பது என்பது குறித்து காவல்துறை சட்டத்தின் 53ம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் தொடர்பான சம்பவத்தில் காவல்துறையினரின் செயற்பாடுகளில் குறைபாடுகள் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட தாக்குதல், கொள்ளை அல்லது உயிர் ஆபத்து ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் என்றால் துப்பாக்கிப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும், யாழ்ப்பாண மாணவர்கள் மரணம் தொடர்பில் இவ்வாறான அவசியம் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.