குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
ஊடகங்கள் அரசாங்கத்தை விமர்சனம் செய்ய காணப்படும் அதே அளவு உரிமை, ஊடகங்களை விமர்சனம் செய்ய அரசாங்கத்திற்கும் உண்டு என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையிலான காத்திரமான விவாதங்கள் பூரண ஜனநாயகத்தின் அடையாளமாக கருதப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ள அவர் எனினும் கடந்த காலங்களைப் போன்று அரசாங்கம் எந்தவொரு ஊடகத்தையும் அச்சுறுத்தவில்லை எனவும் ஊடகவியலாளர்களை கடத்த வெள்ளை வான்கள் அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீ.எஸ்.என் ஊடக நிறுவன ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டமை ஊடக ஒடுக்குமுறையாக கருதப்பட முடியாது எனவும் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தைக்கொண்டு அந்த ஊடக நிறுவனம் இயங்கி வந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே குறித்த ஊடக நிறுவனத்தின் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.