பட்டாசுக் கடை விதிமீறலால் நடந்த உயிரிழப்புகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது என்பதற்கு அதிகாரிகளை உரிய விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 20-ம் திகதி சிவகாசியில் இடம்பெற்ற பட்டாசு விபத்தில் 9 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவத்தை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வு தாமாக முன்வந்து பொது வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது.
நேற்றையதினம் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வேளை பட்டாசுக் கடையை அண்மித்து, விபத்தை ஏற்படுத்தும் வகையில் இதர கட்டிடங்கள் அமையக்கூடாது என சட்டம் உள்ள நிலையில், பட்டாசுக் கடையின் அருகிலேயே ஹோட்டல் இருந்தது எப்படி எனக் கேள்வி கேட்ட நீதிபதிகள் சிவகாசியில் நடந்த விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமும், விதிமீறல்களுமே காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாறி, மாறி குற்றம் சாட்டுவது ஏற்கத்தக்கதல்ல எனவும் பட்டாசுக் கடை விதிமீறல்கள் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கூடாது எனவும் இதுவரை நடத் தப்பட்ட விசாரணைகள் திருப்தி அளிக்கவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் மற்றும் துணை கண்காணிப் பாளர் நாளை நேரில் ஆஜராகி சிவகாசியில் நடைபெற்ற விபத்து தொடர்பான விசாரணை அறிக்கைகளுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.