குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஹாவா என்பது பாதாள உலகக் குழுவா அல்லது புலனாய்வுப் பிரிவா என ஊடகவியலாளர்கள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்விக்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எதனையும் தாம் கூறப் போவதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் யாழ்ப்பாணத்தில் ஹாவா என்ற ஒர் குழுவொன்று வாள் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஹாவா குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் சென்று வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவினர் எனக் கருதியே காவல்துறையினர் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1 comment
https://www.youtube.com/watch?v=s7AhPnZi8Tw
Comments are closed.