இலங்கை பிரதான செய்திகள்

நேற்றயதினம் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது

arrested-1
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

நேற்று  கிளிநொச்சி ஏ9 வீதி வைத்திய சாலைப்  பகுதியில்  பொலிசார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டத்தை அடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட  தாக்குதல் காரணமாக  காயமடைந்த பொலிஸ்  உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு  அனுராதபுரம் வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ள  நிலையில் , பொலிசாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் தர்மபுரம் கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த  நபர் ஒருவரை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிசார் இணைந்து இன்று  பிற்ப்பகல்  கட்டைக்கடுப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

arrested-2

கைது செய்த சந்தேகநபரை வைத்திய பரிசோதனையின் பின்  கிளிநொச்சி நீதவான்  நீதிமன்றில் ஆயர்ப்படுத்தியத்தை அடுத்து குறித்த சந்தேக நபரை  எதிர்வரும் முப்பத்தோராம்  திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது .

arrested-3 arrested-4 arrested-5 arrested-6 arrested-7

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.