குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் கோப் குழுவின் சட்ட ரீதியான தலைவரான சுனில் ஹந்துனெத்தியின் அறிக்கையே ஏற்றுக்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சி எந்தவொரு தரப்பினையும் பாதுகாக்க முயற்சிக்காது என தெரிவித்துள்ள அமைச்சர் சந்திம வீரக்கொடி குறித்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போது ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களினால் நாட்டுக்கு ஏதேனும் நட்டம் ஏற்பட்டிருந்தால் அதற்கான நட்டத்தை ஏற்படுத்தியவர்களிடமிருந்து அறவீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.