வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும் இதன் போது காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி நிக்கோலஸ் ஜனநாயக நடைமுறைகளை மீறியுள்ளதாக தெரிவித்து அவர் மீது விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் கோரியே அங்கு போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் எதிர்க்கட்சி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொது வேலைநிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இதேவேளை தனது ஆட்சியைக் கவிழ்க்க சதிகள் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.