141
அமெரிக்க துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்த ஆயுதத்தை குறித்த நபர் வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அம்பலாங்கொடை விஹாரகொட பிரதேசத்தில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட பொர 12 ரக துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. வதுகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்றைய தினம் பலப்பிட்டிய நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
Spread the love