Home இலங்கைசதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

by admin

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் எட்டாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் பெறுவதற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட பின்னர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று (01.04.25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் அவரை எதிர்வரும் எட்டாம் திகதி வரை மீண்டும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அளித்த தகவலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More