அல் கய்தா இயக்க பிராந்திய தலைவரை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினர் ஆளில்லா விமானங்களின் ஊடாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அல் கய்தா இயக்கத் தலைவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் அல் கய்தா தலைவராகக் கருதப்படும் Farouq al-Qahtani என்பவர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க இராணுவத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மற்றுமொரு தாக்குதலில் அவரது பிரதித் தலைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சவூதியை பிறப்பிடமாகக்கொண்ட, கட்டார் பிரஜையான Farouq al-Qahtani அமெரிக்காவினால் மிகவும் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் முக்கிய இடத்தை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்கத்கது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீதான தாக்கதல்களை இவர் திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.