குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் குறித்த வழக்கை விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் ஜூரிகள் சபையில் யார் யார் உள்ளடக்கப்படுவர் என்பது பற்றிய தீர்மானமும் 31ம் திகதியே மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கை சிங்களம் பேசும் விசேட ஜூரிகளே நடத்த வேண்டும் என பிரதிவாதிகளான கடற்படை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பாதிக்கப்பட்ட தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அதிலும் விசேட பிரதிநிதிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஜுரிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட முடியாது என்பது சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தன்னால் வெளியிடப்பட்ட ஆட்சேபனை கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.