283
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்றையதினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபாவான 05 சரீரப் பிணையின அடிப்படையில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் எந்தவொரு இராணுவ முகாமிற்கும் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love