179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜூன் மகேந்திரனை நீதிமன்றில் நிறுத்த, அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த ஒட்டுமொத்த மோசடியையும் மூடி மறைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்து கோப் குழு நாளைய தினம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
Spread the love